Published : 05 Sep 2022 07:09 AM
Last Updated : 05 Sep 2022 07:09 AM

சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நாளிதழ் வாசிப்பு இயக்கம் தொடக்கம்

தாங்கள் படித்த நாளிதழ்களை உயர்த்திக் காண்பிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள். உடன் ஆசிரியர்கள்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நாளிதழ் வாசிப்பு இயக்கம் தொடங் கப்பட்டுள்ளது. இதை பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தொடங்கி வைத்தார்.

அவர் பேசும்போது, "6 முதல் 10 வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசிப்பதில் சிரமம் இருக்கக் கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வழங்கி அதனை வாசிக்க பயிற்சி அளிப்பது வாசிப்பு இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதனால் மாணவர்களுக்கு வாசிப்பு திறன் மேம்படுவதோடு பாடத்தோடு அன்றாட செய்திகளையும் அறிந்து கொள்ள உதவுகிறது. தொடர் பயிற்சியினால் அனைத்து மாணவர்களுக்கும் வாசிப்பு பழக்கம் வளர்ந்து எதிர்காலத்தில் பலபுத்தகங்களை வாசிக்க அவர்களுக்கு உதவும்" என்றார்.

வாசிப்பின் முக்கியத்துவம்: இந்நிகழ்ச்சியில் உதவி தலைமைஆசிரியை தனலட்சுமி, ஆசிரியர்கள் ரமேஷ் பத்மாவதி தங்கபாண்டி வீரபாண்டி, ஆய்வக உதவியாளர் விஜயபாபு, பயிற்சி ஆசிரியை ரம்யா ஆகியோர் வாசிப்பின் முக்கியத்துவத்தை மாணவர் களுக்கு விளக்கிக் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x