

திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் மண்டல அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி கால்பந்து அணியினர் சிறப்பாக விளையாடினர்.
இப்போட்டிகளில் 14 வயதுக்குட் பட்டோர் பிரிவில் முதலிடமும் 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் முதலிடமும் 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இரண்டாம் இடம் பெற்றது.
சிறப்பாக விளையாடிய கால்பந்து அணி வீரர்களை பள்ளியின் தாளாளர் அருட்தந்தை அருள்தாஸ், தலைமை ஆசிரியர் அருட்தந்தை ஜார்ஜ், உடற்கல்வி ஆசிரியர் டேமியன் ராபர்ட் குமார் ஆகியோர் பாராட்டினர்.