Published : 26 Aug 2022 06:26 AM
Last Updated : 26 Aug 2022 06:26 AM
சென்னை: தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு (இஎஸ்எல்சி) அக்டோபர் மாதம் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
1.10.2022 அன்று பன்னிரண்டரை வயது பூர்த்தி அடைந்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப் பிக்க தகுதியுடையவர் ஆவர். அவர்கள் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) குறிப்பிடப்பட்டுள்ள இ-சேவை மையங்களுக்கு செப்டம்பர் 6 முதல் 10-ம் தேதி வரை நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50 ஆக மொத்த கட்டணம் ரூ.175-ஐ பணமாக விண்ணப்பிக்கு்ம் சேவை மையத்தில் செலுத்த வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராமவர்மா அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT