

செங்கல்பட்டு: அரசு பள்ளி மாணவர்களின் அறிவாற் றல் அபாரமானது என்று டிஆர்டிஓ முன்னாள் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பெருமிதத்துடன் கூறினார்.
சென்னை பல்லாவரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) முன்னாள் விஞ்ஞானி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
விழாவில் அவர் பேசும்போது, "இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர் களின் பங்களிப்பு மிகவும் தேவை. மாணவர்களுக்கு அறிவு சார்ந்த வளர்ச்சி அவசியம். நம் முன்னோர்கள் அறிவாற்றலில் முன்னோடிகளாக இருந்தனர். நம் நாடு வளர்ச்சி அடைந்த நாடாக திகழ வேண்டும் என்று மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் விரும்பினார்.
மாணவர்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு கடின உழைப்பு மிகவும்அவசியம். அரசு பள்ளி மாணவர்கள்அறிவாற்றலில் சிறந்து விளங்குகிறார் கள். அவர்களின் அறிவாற்றல் அபாரமானது" என்றார்.
10, 11, 12-ம் வகுப்புகளில் முதல் இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ரிலையான் பெசிலிட்டி சர்வீசஸ் நிறுவனத்தின் பரிசுத்தொகையையும், கோப்பைகளையும் அவர் வழங்கினார். விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ந.சுதா, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.