பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது எப்படி?: பாளை. மகளிர் பள்ளியில் விழிப்புணர்வு

பாளையங்கோட்டை செயின்ட் இக்னேஷியஸ் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகளிடையே ஆய்வாளர் ரமேஸ்வரி  உரையாற்றினார்.
பாளையங்கோட்டை செயின்ட் இக்னேஷியஸ் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகளிடையே ஆய்வாளர் ரமேஸ்வரி உரையாற்றினார்.
Updated on
1 min read

பாளையங்கோட்டை மகளிர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது எப்படி? என்பது குறித்து பெண் காவல் ஆய்வாளர் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பாளையங்கோட்டை செயின்ட் இக்னேஷியஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஸ்வரி கலந்துகொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், போக்சோ சட்டம்,காவல் உதவி செயலியின் பயன்கள்குறித்தும் விளக்கினார். காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்வது குறித்து செயல்விளக்கமும் அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in