

கோவை அருகே அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 36 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் ஒன்றுகூடி மகிழ்ந்தனர்.
கோவை ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1986-ம்ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் சந்தித்துக்கொண்டனர்.
ஆண்கள், பெண்கள் என மொத்தம் 67 பேர் இந்த சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். அப்போது, தாங்கள் பள்ளியில் படித்தபோது நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவங்களை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டனர். பின்னர், பள்ளியிலேயே அனைவரும் மதிய உணவு அருந்தி, நினைவாக குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த சந்திப்பு நிகழ்வு குறித்து முன்னாள் மாணவர்கள் கூறும்போது, “நாங்கள் படித்து முடித்த 25-வது ஆண்டின் நினைவாக கடந்த 2011-ம் ஆண்டு சுமார் ரூ.10 லட்சம் செலவில் பள்ளிக்கு விழா மேடை அமைத்து கொடுத்தோம்.
அதோடு, பள்ளி நூலகத் துக்கு தேவையான புத்தகங் களை வழங்கினோம். தற்போது 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிதாக துருப்பிடிக்காத கொடிக்கம்பத்தை ரூ.36 ஆயிரம்செலவில் அமைத்துக் கொடுத்துள் ளோம்" என்றனர்.