Published : 03 Aug 2022 06:35 AM
Last Updated : 03 Aug 2022 06:35 AM
கோவில்பட்டி; உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தையொட்டி கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில், 10 கி.மீ. போட்டி தூரம் நிர்ணயிக்கப்பட்டது.
போட்டியின் தொடக்கமாக வ.உ.சி. அரசு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாரத்தான் போட்டியை கயத்தாறு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரும், தூத்துக்குடி மாவட்ட தடகள சங்கத் தலைவருமான எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா தொடங்கி வைத்தார்.
ஆண்கள் பிரிவில் திருவள்ளூர் ஜெயா மெட்ரிக் பள்ளி மாணவர் லிங்ககுமார் முதலிடம் பெற்றார். 2-வது இடத்தை வடக்கன்குளம் அன்னை தெரசா பள்ளி மாணவர் இம்மானுவேல், 3-வது இடத்தை காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர் முகேஷ் ஆகியோர் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் புதூர் அரசு பள்ளி மாணவி கோகிலா முதலிடத்தையும், புதூர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவி சங்கீதா 2-வது இடத்தையும், விளாத்திகுளம் அரசு பள்ளி மாணவி ராதிகா 3-வது இடத்தையும் பிடித்தனர்.
ஆறுதல் பரிசு
முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.5,000, 2-ம் இடம் பெற்றோருக்கு ரூ.3,000, 3-வது இடம் பிடித்தோருக்கு ரூ.2,000 பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், 4 முதல் 10-வது இடம் வரை பிடித்தவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.500 அளிக்கப் பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT