

கடலூர்: குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு காவல்துறை அதிகாரி பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போதை பொருள், சைபர் குற்றங்கள் தடுப்பது குறித்து, கடலூர் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காவல்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி போதை பொருள்களுக்கு எதிரான விழிப்பணர்வு பிரச்சார நிகழ்ச்சி குறிஞ்சிப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இதில் குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் செல்வம் கலந்துகொண்டு பேசும்போது, ‘‘மாணவர்கள் படிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பள்ளியில் ஏற்படும் சிறு பிரச்சினைகளை ஆசிரியர் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் பெற்றோர் கவனத் திற்கு கொண்டு சென்று காவல்துறை மூலமும் தீர்வு காணலாம்’’ என்றார்.