Published : 02 Aug 2022 06:32 AM
Last Updated : 02 Aug 2022 06:32 AM

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்த மாணவிகளின் சிறப்பு நடனம்

புதுக்கோட்டை புத்தக திருவிழா தொடக்க விழாவில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் சிறப்பு நடனங்கள்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் இடம்பெற்ற பள்ளி மாணவிகளின் சிறப்பு நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. புத்தக வாசிப்பை மையப் படுத்திய பாடல்களுக்கு அவர்கள் நடனமாடியது அனைவரையும் ஈர்த்தது.

புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்துகின்ற புதுக்கோட்டை ஐந்தாவது புத்தகத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த புத்தக திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற இருக்கிறது.

தொடக்கநாள் விழாவில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், "புதுக்கோட்டை நம் புகழ்க் கோட்டை" என்ற பாடலோடு புத்தக வாசிப்பை நேசிக்கும் உணர்வுள்ள பாடல் மற்றும் பெண் கல்வியின் அவசியம் ஆகிய கருத்துள்ள நடனங்கள் இடம்பெற்றன.

மாணவி களின் சிறப்பு நடனம், புத்தக வாசிப்பின் அவசியத்தை உணர்த்து வதாகவும் பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் இருந்ததாக விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களும் புத்தக ஆர்வலர்களும் வெகுவாக புகழ்ந்தனர்.

புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் முத்துநிலவன், வீரமுத்து, மணவாளன் உட்பட அறிவியல் இயக்க நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x