அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அனைத்து பள்ளிகளிலு்ம் மனநல ஆலோசகர்களை நியமிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வழக்கில் நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவு: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். மாவட்டத்துக்கு ஒரு மனநல ஆலோசகராவது இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

விடுதிகளுடன் கூடிய பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் இருப்பது மிகவும் அவசியம். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சம்பவங்களை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்தி மற்ற மாணவர்களின் மனதிலும் ஊடகங்கள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in