

புதுடெல்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 12,000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
மக்களவையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங் கள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அவர்களது கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த கல்வித்துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி கூறுகையில், ‘‘கேந்திரிய வித்யாலயாவில் நாடு முழுவதும் 12 ஆயிரத்து 44 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 1,162 இடங்களும், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் 1,006 இடங்களும் காலியாக உள்ளன.
இதேபோல், ஆசிரியர் அல்லாத பணிகளில் 1,332 இடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.