பிளஸ் 1 துணை தேர்வு: நாளை ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 1 துணை தேர்வு: நாளை ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்
Updated on
1 min read

சென்னை: பிளஸ் 1 துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 1 துணை தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களின் ஹால்டிக்கெட்டை 26-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில்இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அப்போது தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் நிரந்தர பதிவெண்ணை குறிப்பிட வேண்டும்.

செய்முறைத்தேர்வு விவரங்களை தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும். ஹால்டிக்கெட் இல்லாமல் தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். துணை தேர்வு கால அட்டவணையை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in