Published : 20 Jul 2022 06:34 AM
Last Updated : 20 Jul 2022 06:34 AM
பென்குயின் பறவை தனது இனப்பெருக்கத்தை நிறுத்தியதற்கானகாரணம் குறித்து பள்ளிக்குழந்தை களுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் விளக்கிக் கூறினார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வனம் இந்தியா அறக்கட்டளையின் வனாலயத்தில், வான் "மகாஉத்சவ் நிகழ்ச்சி" நடந்தது. இதில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கோவை சதாசிவம் பேசியதாவது: இன்றைக்கு பள்ளியில் படிக்கும் இந்த தலைமுறை குழந்தைகள் தான், காலநிலை மாற்றம் என்ற சொல்லை கேள்விப்படுபவர்கள்.
பருவநிலை மாற்றம், பெரும் புயல், பெரும் வறட்சி, நிலச்சரிவு, கடல்நீர் மட்டம் உயர்வு உட்பட பல்வேறு துயரங்கள் பூமியை சூழ்ந்துள்ளன. இந்த தலைமுறை இயற்கையை காப்பாற்றாமல் போனால், இயற்கையை பார்க்கும்கடைசி தலைமுறை இவர்களாகத்தான் இருப்பார்கள். மரம் நடுவது மட்டுமல்ல, பூமியில் நிகழும் சுற்றுச்சூழல் மாற்றங்களை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லித்தர வேண்டும்.
மொரீஷியஸ் நாட்டில் வாழ்ந்த ‘டோலா’ என்ற பறவையை மனிதன் அழித்தான். அவர்களின் வாழ்வியல் விழுமியங்களில் காலங்காலமாக வழிபட்டு வந்த கல்வார் மேஜர் என்ற மரம் அழிவுற்றது. டோலா பறவை, கல்வார் மேஜர் மரத்தின் விதையை உண்டு, செரித்து நொதி செய்து அந்த விதைகள் வளர்ந்தன. ஆனால் மனிதர்கள் வளர்த்த விதைகள் வளரவில்லை. பறவை அழிந்தது.தொடர்ந்து தாவரம் அழிந்தது. தாவரம் அழிந்ததால், பூச்சிகள் மடிந்தன. பல்லுயிர்ச்சூழல் கெடுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைகளை, காடுகளை நாம் கொண்டாட வேண்டும். கடல் மட்டம் உயர்வால், பென்குயின் பறவை தன் இனப்பெருக் கத்தை நிறுத்தி ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. கடற்கரையில் இடப்படும் முட்டைகள், கடல் மட்டம்உயர்வால் கடலுக்குள் சென்றுவிடு கின்றன. அவற்றால் குஞ்சு பொரிக்க முடியவில்லை. இந்த பூவுலகு, மனி தர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை. அனைத்து உயிர்களுக்கும் சொந்தம். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT