

சென்னை: 75-வது சுதந்திர தின அமுத பெரு விழாவையொட்டி காஞ்சிபுரம் சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் டிஆர்டிஓ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
நாட்டின் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு மாணவரையும் திறன் வாய்ந்த சாதனையாளர்களாக உருவாக்கும் வகையில் இந்தாண்டு முழுவதும் ஏவுகணை அறிவியல், செயற்கைக்கோள் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு கள், செயற்கை நுண்ணறிவு, யோகா, திருக்குறள், சிலம்பம், ஓவியம், பேச்சுத் திறன், எழுத்தாற்றல், கராத்தே, நடனம், பாடல், அதீத ஞாபக திறன் உள்ளிட்ட 75 துறைகளில் சாதனையாளர்களாக திகழும்75 மாணவர்களின் அணிவகுப்பும் காட்சிப்படுத்துதலும் இடம்பெறுகின் றன.
அந்த வகையில், காஞ்சிபுரம் சுப்பராய முதலியார் மேல்நிலைப்பள்ளியில் 75-வது சுதந்திர தினஅமுத பெருவிழா கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில் பிரமோஸ்ஏவுகணையின் தந்தை என அழைக்கப்படும் டிஆர்டிஓ விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரை யாடினார்.
மாணவர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாதிரிகளின் கண்காட்சியை பார்வையிட்டு அவர் களை பாராட்டினார்.