

பள்ளிகளில் வாரம் இரண்டு முறை இலக்கிய வாசிப்பு வகுப்பு நடத்த வேண்டும் என, கவிஞர் வைரமுத்து யோசனை தெரிவித்தார்.
கோவையில் இலக்கிய விழாவில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது: இலக்கியம், கொண்டாட்டம் என இருந்த சினிமா இன்று கொண்டாட்டம் மட்டுமே என மாறிவிட்டது. இலக்கிய பாடல்களை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். அச்சு ஊடகம் குறைந்தால் இலக்கியம் குறைந்து போகும்.
அனைத்து பள்ளிகளிலும் வாரத்துக்கு இரண்டு முறை இலக்கிய வாசிப்பு வகுப்பு நடத்தவேண்டும். பிள்ளைகளுக்கு வாசிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். அடிப்படை தெரிந்த தமிழாசிரியர்கள் பாடம் நடத்தினால் மட்டுமே மாணவர்களுக்கு தமிழ் முறையாக சென்று சேரும்.
இவ்வாறு அவர் கூறினார்.