

சென்னை: மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் பணிபுரிவதற்காக முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இசை, கலை, விளையாட்டு, நூலகர் மற்றும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பொறுப்புகள் என 1,616 காலி பணியிடங்கள் உள்ளன.
முதல்வர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிஎட் முடித்து பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல், முதுநிலை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் முதுநிலை படிப்பு முடித்து பிஎட் படிப்பும், பிற ஆசிரியர்கள் இளங்கலை பட்டப்படிப்புடன் பிஎட் முடித்து இருக்க வேண்டும்.
தகுதியுடையவர்கள் www.navodaya.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.