Published : 12 Jul 2022 06:28 AM
Last Updated : 12 Jul 2022 06:28 AM

எச்சிஎல் சார்பில் வேலைவாய்ப்பு பயிற்சி: 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

எச்சிஎல் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு பயிற்சியில் பங்கேற்க பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தாங்கள் படித்தபள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு ‘டெக் பீ’ (Tech bee) என்ற வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கு 2020-21, 2021-22 ஆகிய கல்வியாண்டுகளில் அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2முடித்து 60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் மேல்நிலை வகுப்புகளில் கணிதம் அல்லது வணிகக்கணித பாடத்தை படித்திருப்பது அவசியம். டெக்பீ பயிற்சிக்கு திறனறித்தேர்வு, கலந்துரையாடல் ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். மொத்தம் 2 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி, வேலைவாய்ப்புவழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுகுறித்து அனைத்து அரசு, அரசு உதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ‘டெக்பீ’ பயிற்சித் திட்டத்தில் சேர ஆர்வமுள்ள மாணவர்களைக் கண்டறிந்து பரிந்துரை செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x