Published : 11 Jul 2022 06:20 AM
Last Updated : 11 Jul 2022 06:20 AM
சென்னை: நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் நடப்பு கல்வி ஆண்டுக்கான மீன்வள படிப்புகள் தொடர்பான மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிஎப்எஸ்சி, பிடெக் (மீன்வள தொழில்நுட்பம் பிடெக் (எனர்ஜி மற்றும் என்விரான்மென்டல் டெக்னாலஜி), பிடெக் (பயோ-டெக்னாலஜி), பிடெக் (புட் டெக்னாலஜி, பிபிஏ ( மீன்வள பொறியியல் மேலாண்மை) உள்ளிட்ட படிப்புகளில் சேர பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்த மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு கடைசி நாள் ஆகஸ்டு 8-ம் தேதி ஆகும். மாணவர் சேர்க்கை தொடர்பானகூடுதல் விவரங்களை www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT