

தென்காசி: செங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர்கள் 52 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து பழைய நினைவுகளில் மூழ்கினர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1969-70-ம் ஆண்டில் பெரிய பத்து(எஸ்எஸ்எல்சி) வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாநடைபெற்றது. மறைந்த முன்னாள்மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்ஆறுமுகம் வரவேற்றார். முன்னாள்மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜவாஹர்லால் நேரு தலைமைவகித்தார். பள்ளி தலைமையாசிரியர் முருகேசன், உதவி தலைமையாசிரியர்கள் சிவசுப்பிரமணியன், சுடர்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செங்கோட்டை நூலக வாசகர் வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன், செண்பக குற்றாலம், ஆதிமூலம், விழுதுகள் சேகர், வழக்கறிஞர் இளங்கோ, தீயணைப்புத்துறை ஓய்வுபெற்ற அலுவலர் ராமசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னாள் ஆசிரியர்கள் ஜமால், சோமசுந்தரம், சுப்பிரமணியன் ஆகியோர் மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டர். கடையநல்லூர் தொகுதிஎம்எல்ஏ கிருஷ்ணமுரளி சிறப்புரையாற்றினார். முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். நிறைவாக நூலகர் கோ.ராமசாமி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியை பா.சுதாகர் தொகுத்து வழங்கினார்.