Published : 06 Jul 2022 06:44 AM
Last Updated : 06 Jul 2022 06:44 AM

விருதுநகர் | பொதுத்தேர்வில் தோல்வியா? - உடனடி தேர்வில் சாதிக்கலாம்

விருதுநகர்: பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லையா? மாணவர்கள் மனம் தளர வேண்டாம், ஆசிரியர்கள் உதவ காத்திருக்கின்றனர். உடனடிதேர்வில் பங்கேற்று சாதிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட முதன்மைகல்வி அதிகாரி ஞானகவுரி அறிவுரை வழங்கினார்.

2021-2022 கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகளும் தொடங்கி விட்டன.

தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் சிலர் மனம் தளர்ந்து சோர்வுற்ற நிலையில் உள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உடனடி தேர்வில் பங்கேற்க செய்யும் பணியை ஆசிரியர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்காகபல்வேறு திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. இந்த நல்வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது:

10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்காத மற்றும் தேர்ச்சியடையாத மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஜூலை மாதம்உடனடி தேர்வு நடைபெற உள்ளது.இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பித்திருப்பீர்கள். இந்த மாணவ, மாணவிகள் படித்த பள்ளிகளில் ஆசிரியர்களை கொண்ட குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உளவியல் ஆலோசனை

இக்குழுவினர் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியரின் வீடு தேடிச் சென்று ஆலோசனைகளை வழங்குவர். உடனடி தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்குமாறு அவர்களிடம் அறிவுறுத்துவதுடன், அந்தமாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x