ஹரியாணாவில் நடைபெற்ற தேசிய கைப்பந்துப் போட்டியில் சிறப்பாக ஆடிய தேனி பழனிசெட்டிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எ.ஆனந்தியை தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் பாராட்டி பரிசு வழங்கினார்.
நம்ம ஊரு நடப்பு
தேசிய போட்டியில் வெற்றி: தேனி அரசு பள்ளி மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
தேனி: தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில் தமிழக அணி தங்கம் வென்றது. இந்த அணியில் சிறப்பாக ஆடிய தேனி அரசு பள்ளி மாணவியை தேனி மாவட்ட ஆட்சியர் பாராட்டி பரிசு வழங்கினார்.
தேனி பழனிசெட்டிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருபவர் எ.ஆனந்தி. இவர் தேனி மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
கைப்பந்து வீராங்கனையான இவர், ஹரியாணாவில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி சார்பாக விளையாடினார்.
இப்போட்டியில் தமிழக அணி முதலிடம் பெற்று தங்கம் வென்றது. இதனைத் தொடர்ந்து அந்த அணியில் இடம்பெற்று சிறப்பாக செயல்பட்ட எ.ஆனந்தியை தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் பாராட்டி பரிசு வழங்கினார்.
