Published : 04 Jul 2022 06:20 AM
Last Updated : 04 Jul 2022 06:20 AM
கோவை: தேசிய திறனறித் தேர்வில் கோவையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளைச் சேர்ந்த196 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் கல்வித் துறைசார்பில், நாடு முழுவதும் 8-ம்வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறனறித்தேர்வு (என்எம்எம்எஸ்) நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்இந்தத் தேர்வை எழுதலாம்.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தொடர்ந்து9,10,11,12 ஆகிய 4 வகுப்புகளுக்கான கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதன்படி 4 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.48 ஆயிரம்மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக இந்த தொகை செலுத்தப்படும். வறுமை காரணமாக திறமையான மாணவர்கள் பள்ளிக்கல்வியை நிறுத்திவிடக்கூடாது என்பதே இந்தகல்வி உதவித்தொகையின் நோக்கமாகும்.
மாணவர்களின் நுண்ணறிவுத் திறனை சோதிக்கும் வகையில் 90 மதிப்பெண்கள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கேட்கப் படும் கேள்விகளுக்கு 90 மதிப்பெண்கள் என மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு கடந்த மார்ச் 5-ம் தேதி தேர்வு நடைபெற்றது.
தேர்வு முடிவுகள் வெளியானதில், தமிழகம் முழுவதும் 5,900 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், கோவையில் மட்டும் 196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT