வில்லிபுத்தூர் அருகே கருப்புத் துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவ, மாணவிகள்.
நம்ம ஊரு நடப்பு
கண்களை கட்டிக் கொண்டு சிலம்பம் சுற்றி சாதனை
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூர் அருகே கருப்புத் துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி 150 மாணவர்கள் சாதனை படைத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டியில் வீர ராவணன் சிலம்பக்கூடம் சார்பில் 5 முதல் 18 வயதுவரை உள்ள 150 மாணவ, மாணவிகள் கருப்புத் துணியால் தங்களது கண்களைக் கட்டிக்கொண்டு முக்கோணச் சுவடில் 575 முறை சிலம்பம்சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றனர்.
இதற்கான சான்றிதழை சாதனை செய்த குழுவினரிடம் நோபல் உலக சாதனை புத்தகக் குழுவினர் வழங்கினர். சாதனை படைத்த மாணவர்களை ஊர்மக்கள் வெகுவாக பாராட்டினர்.
