

பார்வையற்ற மாணவிகளிடம் இசை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘இசையின் உள்ளுணர்வு’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சிதிருச்சி புத்தூரிலுள்ள விழியிழந்தோர் பள்ளியில் நடைபெற்றது.
கலைக்காவிரி கல்லூரியின் வயலின் துறைத் தலைவர் டி.ஆக்னஸ் ஷர்மிலி, பிஷப் ஹீபர் கல்லூரி நல்ல சமாரியன் குழு ஒருங்கிணைப்பாளர் சாம் தேவஆசிர் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டுஇசை குறித்தும், இசைக் கருவிகளை இயக்கும் விதம் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
மேலும், வயலின் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைப்பது குறித்து மாணவிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூக பணித்துறை மாணவி ஸ்வர்ணஸ்ரீ உள்ளிட்டோர் செய்திருந்தனர்.