

கடந்த கல்வி ஆண்டில் மதுரை மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 வகுப்பில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் விருதுகளை முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் வழங்கினார்.
மதுரை மாவட்டத்தில் 2018-19ம்கல்வியாண்டில் 10, பிளஸ் 2 வகுப்பில் சிறந்த மாணவர்கள் 30 பேருக்குகாமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கும் விழா சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட கல்விஅலுவலர்கள் வளர்மதி (மதுரை), மேலூர்மீனாவதி (மேலூர்), முத்தையா (உசிலம்பட்டி) இந்திராணி (திருமங்கலம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில், இதில் 10ம் வகுப்பில் சிறந்த மாணவர்களான 15 பேருக்கு ரூ.10 ஆயிரம்,பிளஸ் 2 வகுப்பில் சிறந்த மாணவர்களான 15 பேருக்கு தலா ரூ. 20 ஆயிரம் பரிசுத்தொகைகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் வழங்கிபாராட்டினார்.
இதில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்ரகுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காமராஜர் விருது பெற்ற 10ம் வகுப்பு மாணவ, மாணவியர் விவரம்:
மதுரை நேரு வித்யாசாலை மேல்நிலைப் பள்ளி மாணவி ஐஸ்வர்யா,மாணவன் மோகன்; பாப்புநாயக்கன்பட்டி கந்தசாமி வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி மாணவன் கிஷோர்சங்கர், க.அட்சயா, கூடல்நகர் புனிதஅந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சுமித்ராதேவி, இ.டிரோஜினி, காவியா, கூடக்கோவில் நாடார்கள் மேல்நிலைப் பள்ளி ரேகா, உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சுபாஸ்ரீ, மதுரை ஜோதி மேல்நிலைப் பள்ளி ஸ்ரீதேவி, நாகமலை சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஷர்மிளாதேவி, செக்கானூரணி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி மாணவி தனபாண்டி, கூடக்கோவில் நாடார்கள் மேல்நிலைப் பள்ளிமாணவி வைதேகி, திருமங்கலம் பி.கே.என் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பாத்துமுத்து, லட்சுமிபுரம் டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி காஞ்சனாதேவி.
காமராஜர் விருதுக்கு தேர்வான பிளஸ் 2 சிறந்த மாணவர்கள்:
திருமங்கலம் பி.கே.என் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் ரிதி,சித்ரபானு, பாக்கியலட்சுமி, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவன்உதயராஜன், நேரு வித்யாசாலை மேல்நிலைப் பள்ளி மாணவி மகாலெட்சுமி, கூடல்நகர் புனித அந்தோனிணயார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சுருதி, தெற்குவாசல் நாடார் மேல்நிலைப் பள்ளி விக்னேஷ்குமார், தனபால் மேல்நிலைப் பள்ளி மாணவன் மதன்குமார், மதுரை நேரு வித்யாசாலை மேல்நிலைப் பள்ளிமாணவன் மணிகண்டன், கூடக்கோவில் நாடார்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கவிதா, கூடல்நகர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி லெட்சுமி பிரியா, புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி ரா.லோகித்குமார், லட்சுமிபுரம் டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி மாணவி ர.மாலதி, உசிலம்பட்டி டி.இ.எல்.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரீத்தி, ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜோதிலட்சுமி.