நாகர்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு

நாகர்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு
Updated on
1 min read

பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ், சேமிப்புக் கணக்கு தொடங்கும் நிகழ்ச்சி, நாகர்கோவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாவட்ட முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, 112 மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு புத்தகங்களை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் வழங்கி பேசியதாவது:

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கணக்கு தொடங்கலாம். அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை சேமிக்கும் வசதி உள்ளது. 18 வயது முதல் 50 சதவீதம் வைப்புத் தொகையை உயர் கல்விக்காகவும், திருமணத்துக்காகவும் கணக்கில் இருந்துபெற்றுக் கொள்ளலாம். 21 வயதில் கணக்கைமுடித்துக் கொள்ளும் வசதி உள்ளது.சிறப்பானஇத்திட்டத்தை பெண் குழந்தைகளுக்காக பெற்றோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட ஆவின் தலைவர் அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ஜாண்தங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் கிருஷ்ணகுமார், தபால்துறை உதவிகண்காணிப்பாளர் செந்தில்குமார், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கமலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in