

அரியலூர் மாவட்டம் திருமழபாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமானூர் கிளை நூலகம் மற்றும் அரியலூர்ஏ.கே.எம். ஐஏஎஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற இந்த தன்னம்பிக்கை நிகழ்ச்சிக்கு அகாடமி நிறுவனத் தலைவர் கதிர்.கணேசன் தலைமை வகித்தார்.
தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பேனா, பென்சில் வழங்கினார். அவர் பேசும்போது, "தேர்வின்போது பதற்றம் இல்லாமல், ஒவ்வொரு கேள்வியையும் ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்து, தெளிவாக பதில் எழுத வேண்டும். தேர்வு நெருங்கவுள்ள இந்த நேரத்தில் விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்களுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
எஸ்.என்.எஸ்.தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி பேராசிரியர் ராஜசேகரன், மாணவர்கள் தேர்வுக்கு படிக்கும் முறைகள் குறித்து விளக்கினார்.
ஊராட்சித் தலைவர் சங்கீதா இளையராஜாமுன்னிலை வகித்தார். தலைமையாசிரியர்வெங்கடேசன் வரவேற்றார். ஆசிரியை சாந்தி நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை நூலகர் அம்பேத்கர் செய்திருந்தார்.