வட்டாரக்கல்வி அதிகாரி தேர்வு: உத்தேச விடைகள் வெளியீடு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வட்டாரக்கல்வி அதிகாரி தேர்வுக்கான கீ ஆன்சர் (தற்கா லிக விடைக் குறிப்புகள்) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 97 வட்டாரக்கல்வி அதிகாரி பணியிடங்களை நேரடியாக நிரப்பும் பொருட்டு கணினி வழித்தேர்வு பிப்ரவரி 14, 15, 16-ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது.

இந்த தேர்வை 57 மையங்களில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தற்போது தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜி.லதா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "வட்டாரக்கல்வி அதிகாரி தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேதி வாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விடை குறிப்பு மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபணை தெரிவிக்க விரும்பினால் வருகிற 26-ம் தேதிக்குள் இணையதளம் வழியாக உரிய ஆதாரங்களுடன் பதிவு செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in