

ராமேசுவரம் அருகே அரியமான் கடற்கரையில் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளராமேசுவரம், தனுஷ்கோடி, அரியமான்உள்ளிட்ட கடல் பகுதிகளில் சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமாரிக்கவும், அரிய கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வனத் துறை மற்றும் மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பக அறக்கட்டளை சார்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ராமேசுவரம் அருகே உள்ள அரியமான் கடற்கரையில் மண்டபம் முகாம்ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிமாணவர்கள் கடலோரப் பகுதிகளைசெவ்வாய்க்கிழமை தூய்மைப்படுத்தினர். இப்பணியை மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கடற்கரையில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றின் பயன்பாட்டினை குறைக்கவும், குப்பைகள் மற்றும் கழிவுகளை குப்பைத் தொட்டிகளில் போட்டு கடற்கரையை தூய்மையாகப் பராமரிக்கவும், அரிய கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் விளக்கினர்.