பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாது: முதுகலை ஆசிரியர்கள் கோரிக்கை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நேரடி நியமனம்பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆ.ராமு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில், ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பல்வேறு வகையான பயிற்சியை அளிப்பது பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தை பாதிக்கும்.

கல்வி ஆண்டின் தொடக்கத்தில் அதாவது, ஜூன், ஜூலை மாதங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்த வேண்டும். பயிற்சிக்கான நிதியை மத்திய, மாநில அரசுகள் தொடக்கத்திலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

நிதியாண்டின் கடைசியில் நிதி ஒதுக்கி ஆசிரியர்களை தொடர் பயிற்சியில் கலந்துகொள்ள செய்யும் போக்கை பள்ளிக் கல்வித்துறை உடனடியாக கைவிட வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், மத்திய, மாநில அரசுகளின் பயிற்சிகளை பொதுத்தேர்வு நிறைவு பெற்ற பிறகு நடத்த பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in