மாநில நீச்சல் போட்டியில் நெல்லை பாலகிருஷ்ணா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்ற வீரர், வீராங்கனைகள்.
மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்ற வீரர், வீராங்கனைகள்.
Updated on
1 min read

மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் நெல்லை பாலகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம், மதுரை நீச்சல் சங்கம் ஆகியவை இணைந்து 14-வது மாநில அளவிலான நீச்சல் போட்டிகளை மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடத்தின. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 30 அணிகளாக சுமார் 450-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகள் 8 பிரிவுகளாக நடைபெற்றன. போட்டியை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 370 புள்ளிகள் பெற்று நெல்லை பாலகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.

குரூப்-1 போட்டியில் சரண், ஸ்வர்ணஹரிதா, குரூப் 2-ல் ஜெஸ்சுதாமஸ், தனுஷா, குரூப் 3-ல் அகில்பாலாஜி, ரோஷினி, குரூப் 4-ல் யஷ்வந்த், அக்க்ஷயா, குரூப் 5-ல் கபிலன், வினாய, குரூப் 6-ல்மோனிஷாநாயுடு, அஸ்விதா, குரூப் 7-ல் ஜாஸ்வின்விஜய், ஹாஷினி, குரூப் 8-ல் விதுல்விஸ்வநாத், திவ்யா ஆகியோர் தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

பதக்கம், சான்றிதழ்

தமிழ்நாடு நீச்சல் சங்க துணைத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு நீச்சல் சங்க செயலாளர் சந்திரசேகர், மதுரை நுகர்பொருள் வியாபாரிகள் சங்கச் செயலாளர் மோகன் ஆகியோர் வெற்றி பெற்றமாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in