

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான குடியரசு தினம், பாரதியார் தினம் கடற்கரை வாலிபால் போட்டிகள் தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையில் நடைபெற்றன.
மாணவிகளுக்கான போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்து 192 பேர் கலந்து கொண்டனர். போட்டிகள் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நாமக்கல் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளியின் யுவஸ்ரீ- அமிர்தா ஜோடிமுதலிடம் பிடித்தது.
கரூர் புனித தெரஸா மேல்நிலைப் பள்ளியின் இலக்கியா - பாரதி ஜோடி 2-ம் இடத்தையும், புதுக்கோட்டை மாவட்டம் குழிப்பிறை ஆர்.எம்.ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியின் அட்சயா-அடைக்கம்மை ஜோடி 3-வது இடத்தையும் பெற்றன.
17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசுமேல்நிலைப் பள்ளியின் நவா- கோபிகா ஜோடி முதலிடம் பிடித்தது.நாகப்பட்டினம் மாவட்டம் மாதிரவேளூர்எம்.வி.உயர்நிலைப் பள்ளியின் வசந்தபிரியா- சங்கரி ஜோடி 2-ம் இடத்தையும், நாகர்கோவில் வடசேரிஎஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி யின் சுபா- காஞ்சனா ஜோடி 3-ம் இடத்தையும் பிடித்தன.
19 வயதுக்குட்பட்டோர் பிரிவில்ஈரோடு நம்பியூர் குமுதா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியின் நிஷா- சோபியாஜோடி முதலிடத்தையும், நாகர்கோவில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளியின் சோபிகா- வர்ஷினி ஜோடி2-ம் இடத்தையும், கரூர் புனித தெரஸாமேல்நிலைப் பள்ளியின் திரிஷா- ரித்திகா ஜோடி 3-ம் இடத்தையும் பெற்றன. அந்த அணியினருக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் வாசு பரிசுகளை வழங்கினார்.