

மதுரையில் தேசிய மாணவர் படை-4 தமிழ்நாடு பொறியாளர் கம்பெனி சார்பில் ‘ஏ சான்றிதழ்’ தேர்வு அரபிந்தோ மீரா பள்ளியில் நடைபெற்றது. இத்தேர்வை என்சிசி கமான்டிங் அதிகாரி கர்னல் அயூப் தொடங்கி வைத்தார்.
அலங்காநல்லூர் அரசு ஆண்கள்மேல்நிலைப் பள்ளி, யூ.சி. மேல்நிலைப்பள்ளி, டி.வி.எஸ் பள்ளி, சவுராஷ்டிரா பள்ளி, வேலம்மாள் பள்ளி, புனித மரியன்னை பள்ளி, புனித பிரிட்டோ பள்ளி, எம்.எம்.திருநகர் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 472 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இத்தேர்வை ஜூனியர் கமாண்டிங் அலுவலர் பீட்டர் உள்ளிட்ட என்சிசி அதிகாரிகள் கண்காணித்தனர்.