குழந்தை தொழிலாளர்களுக்கு பொதுத்தேர்விலிருந்து விலக்கு: தமிழக அரசுக்கு கோரிக்கை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சிறப்பு பயிற்சி மையங்களில் 5 மற்றும் 8-ம் வகுப்பு படித்துவரும் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சிறப்பு பள்ளியை நடத்தி வரும் ஈரோடு சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.நடராஜ் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கு கல்வி அளித்து, அந்தந்த பகுதிகளில் உள்ள குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஈரோடு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் 295 குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு 14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை மீட்டு சிறப்புப்பள்ளி பயிற்றுநர் மூலம் 2 ஆண்டுகள் வரை கல்வி கற்பிக்கப்படுகிறது. பின்னர் இந்த மாணவர்களை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் சேர்த்து விடுவது நடைமுறையாக உள்ளது.

கல்வி கற்காமல் தொழிலாளர்களாக மாறிய குழந்தைகளை மீட்டு, அவர்களை சிறப்பு பள்ளிகளில் சேர்த்து பராமரிப்பதே மிக சிரமமான பணியாகும். எழுத படிக்கவே தடுமாறும் இக்குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்தால், அவர்கள் பயந்து பள்ளிக்கு வருவதையே நிறுத்தி விடக்கூடும்.

அரசுக்கு வேண்டுகோள்

எனவே, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுதுவதில் இருந்து தமிழக அரசு விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in