கோப்புப்படம்
நம்ம ஊரு நடப்பு
8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஜன.27 முதல் விண்ணப்பம்
அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஜனவரி 27 முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
1.1.2020 அன்று பன்னிரண்டரை வயது பூர்த்தி அடைந்த தேர்வர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர். அரசு தேர்வுத்துறை சேவை மையத்துக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
சேவை மையங்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
