

நடப்பு கல்வியாண்டில் தேர்வுக்கு தயாராகக் கூடிய மாணவ, மாணவி களை ஊக்குவிக்கும் வகையில் 'பரீக்ஷா பே சர்ச்சா 2020' என்ற நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவது எப்படி என்பதுகுறித்து பிரதமர் மோடி பேசினார்.
இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது. அரியலூர்நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த நிகழ்ச்சி அகன்றதிரையில் காண்பிக்கப்பட்டது. பிரதமர் இந்தியில் பேசியதை ஆசிரியர்கள் விளக்கிக் கூறினர்.