ஓந்தாம்பட்டி பள்ளியில் முப்பெரும் விழா பொதுத் தேர்வுகளில் சாதனை புரிந்தோருக்கு தங்க நாணயம்

முப்பெரும் விழாவில் மரக்கன்று நடுகிறார் மாவட்ட கல்வி அலுவலர் ராஜலிங்கம். உடன், பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜராஜன், உதவி தலைமை ஆசிரியர் அழகு சுப்பிரமணியன்.
முப்பெரும் விழாவில் மரக்கன்று நடுகிறார் மாவட்ட கல்வி அலுவலர் ராஜலிங்கம். உடன், பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜராஜன், உதவி தலைமை ஆசிரியர் அழகு சுப்பிரமணியன்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் ஓந்தாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம், பள்ளி ஆண்டு விழா, பள்ளி விளையாட்டு போட்டி ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜராஜன் தலைமை வகித்தார். மணப்பாறை கல்வி மாவட்ட அலுவலர் ராஜலிங்கம் வாழ்த்திப் பேசினார்.

நிகழ்ச்சியையொட்டி, 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கும், தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டன. மேலும் 2,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

விழாவில் உதவி தலைமை ஆசிரியர் அழகு சுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வீராச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பெற்றோர்- ஆசிரியர் கழகத்தினர், முன்னாள் மாணவர்கள், ஓந்தாம் பட்டி இணையும் கரங்கள் நற்பணி மன்றத்தினர் ஆகியோர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in