

ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான தன்னம்பிக்கை பயிலரங்கம் சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. தொடக்க விழாவுக்கு கல்லூரி நிறுவனர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் செந்தில்குமார், இணைச் செயலாளர் மலர்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிலரங்கத்தை மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
இதில் தன்னம்பிக்கை பேச்சாளர் ஜெகன் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி என விளக்கமளித்தார். பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வது குறித்தும், எதிர்கால திட்டங்களை மனதில் வைத்து சாதனை படைக்கவேண்டும் என அவர் அறிவுறுத்தினார். தன்னம் பிக்கையோடு படித்து, பதற்றமின்றி பொதுத்தேர்வு எழுதினால் அதிக மதிப்பெண் பெறலாம் என மாணவ மாணவியருக்கு அவர் ஊக்கமளித் துப் பேசினார்.
இதையடுத்து பள்ளி மாணவ மாணவிகள் தியானப் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் சத்திய மங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளி யம்பட்டி, கடம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரம் மாணவ மாணவிககள் கலந்துகொண்டனர். நிறைவாக, கல்லூரி துணை முதல்வர் நாகராஜ் நன்றி கூறினார். இப்பயிலரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.