பள்ளி பரிமாற்ற திட்டத்தில் நகர்ப்புற பள்ளியை பார்வையிட்ட கிராமப்புற பள்ளி மாணவர்கள்

பள்ளி பரிமாற்ற திட்டத்தில் நகர்ப்புற பள்ளியை பார்வையிட்ட கிராமப்புற பள்ளி மாணவர்கள்
Updated on
1 min read

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளிப் பரிமாற்றத் திட்டம் சார்பில் கிராமப்புற பள்ளிகளை நகர்ப்புற பள்ளிகளுடன் இணைக்கும் நோக்கில் கொண்டபெத்தான் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், ஆண்டார் கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளியை பார்வையிட்டனர்.

இந்நிகழ்வுக்கு ஆண்டார் கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முனியாண்டி தலைமை வகித்தார்.

கொண்டபெத்தான் தலைமை ஆசிரியர் தென்னவன், ஆசிரியப் பயிற்றுநர் உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை ஜமீலா வரவேற்றார்.ஆண்டார்கொட்டாரம் பள்ளி மாணவர்கள், கொண்ட பெத்தான் பள்ளி மாணவர்களை கை குலுக்கி வரவேற்றனர். அதை யொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இருபள்ளி மாணவர்கள் ஒருவருக் கொருவர் தங்கள் பள்ளிகள் குறித்து கலந்துரையாடினர்.ஆண்டார் கொட்டாரம் பள்ளியிலுள்ள ஆய்வகம், நூலகம், கணினி அறை, ஒலி-ஒளி கண்காட்சி வகுப்பறை, மூலிகைத்தோட்டம், பல்வகை மரங்கள் அமைந்த தோட்டம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

மேலும் களப்பயணமாக பள்ளிக்கு அருகிலுள்ள அம்மா பூங்கா, மாநகராட்சி கழிவு நீரேற்று தொழிற்சாலை ஆகியவற்றைப் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் விஜயலட்சுமி தீபா கிறிஸ்டபெல், ஜெருசா மெர்லின், சிந்தாதிரை ஆகியோர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in