

தென்னிந்திய அளவில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி, கோவையில் 5 நாட்கள் நடக்கிறது. மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் விஸ்வேஸ்வரய்யா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.
அந்த வகையில் தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி, கோவையில் ஜன. 28-ம்தேதி தொடங்கி பிப். 1-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கோவையில் ஆய்வு மேற்கொண்டார்.
அறிவியல் கண்காட்சி தொடர்பான அவர் கூறும்போது, "இக்கண்காட்சியில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 படைப்புகள் காட்சிபடுத்தப்பட உள்ளன.
சிறந்த படைப்புகள் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்படும். அது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். கண்காட்சியில் 600 மாணவர்கள் பங்கேற்கிறார்கள்" என்றார்.