ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் சார்பில் சிறப்பு ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி

கோவையில் நடைபெற்ற பணியிடைப் பயிற்சியில் கலந்து கொண்ட சிறப்பு ஆசிரியர்கள்.படம்: த.சத்தியசீலன்
கோவையில் நடைபெற்ற பணியிடைப் பயிற்சியில் கலந்து கொண்ட சிறப்பு ஆசிரியர்கள்.படம்: த.சத்தியசீலன்
Updated on
1 min read

கோவையில் சிறப்பு ஆசிரியர்களுக்கு 3 நாள் பணியிடைப் பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் சார்பில், சிறப்பு ஆசிரியர்களுக்கான 3 நாள் பணியிடைப் பயிற்சி முகாம், கோவை ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 நாட்கள் நடைபெற்றது.

இதில் கோவை, பேரூர், எஸ்எஸ் குளம், பொள்ளாச்சி ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு கற்பிக்கும் 22 ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் கே.கண்ணன் கூறும்போது, 'ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் சார்பில், 2019-2020-ம் நிதியாண்டில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் இப்பயிற்சி அளிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் திட்ட ஏற்பளிப்புக் குழுவின் ஒப்புதலின் படி, கல்வித் திட்டக்கூறில் அறிவுறுத்தியபடி, கற்றல் குறைபாட்டை நீக்குதல், ஐசிடி ஆகிய தலைப்புகளின் கீழ் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பணிவிடுப்பு செய்து, பயிற்சிக்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in