பள்ளி மாணவர்களின் ஆதார் விவரங்கள் பதிவேற்றம்: விரைவாக முடிக்க கல்வித்துறை உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மாணவர்களின் ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை விரைவாக முடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழககத்தில் அரசு பள்ளிகளில் சுமார் 69 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர் பெயர், முகவரி, வருகைப்பதிவு, தேர்ச்சி விவரம் உட்பட அனைத்து அம்சங்களும் கல்வி மேலாண்மை தகவல் மையம் (எமிஸ்) இணைய தளத்தில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் பள்ளி மாணவர்களின் ஆதார் எண் பதிவேற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு ஏதுவாக மாநிலம் முழுவதுள்ள வட்டார வள மையங்களில் 770 ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பெரும்பாலான மாவட்டங்களில் மாணவர்களின் ஆதார் விவரங்கள் முழுமையாக பதிவு செய்யப்படாமலும், அதிகளவில் பிழைகள் இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் தலா 2 லட்சம் வரையான மாணவர்களின் ஆதார் எண் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி என மாவட்டவாரியாக பட்டியல் தயார் செய்து சம்மந்தபட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட் டுள்ளது. இதையடுத்து தவறுகளை சரிசெய்து மாணவர்களின் ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை விரைவாக முடிக்கவும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in