

சென்னையில் பள்ளி மாணவர் களுக்கு ஜனவரி 11,12-ல் ஓவியம், வினாடி-வினா, மாறுவேடம், ஆடல் பாடல் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
சீனிவாஸ் இளைஞர்கள் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு இடையே ஓவியம், மாறுவேடம், வினாடி-வினா, குழு பாடல், குழு விவாதம், கலை, நடனம் ஆகிய பல்வேறு போட்டிகள் (SYMA Child Fest) சென்னையில் ஜனவரி 11, 12-ம் தேதிகளில் நடத்தப்படுகின்றன.
இப்போட்டிகள் அனைத்தும் திருவல்லிகேணி ஐஸ்ஹவுஸ் என்கேடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும். ஓவியம், மாறுவேடம் ஆகிய போட்டிகளில் நேரடியாக கலந்துகொள்ளலாம். இதர போட்டிகளில் மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் பள்ளி வழியாக மட்டுமே பங்கேற்க முடியும்.
போட்டிகளில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை www.syma.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நுழைவு விண்ணப்பங்கள் ஜனவரி 10-ம் தேதிக்குள் வந்தடைய வேண்டும். போட்டிகள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 7338863050 என்ற செல்போன் எண்ணில் (காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை) தொடர்புகொள்ளலாம் என்று அந்த அமைப்பின் செயலாளர் ஆர்.சேஷாத்ரி தெரிவித்துள்ளார்.
இந்த போட்டிகளில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100 பள்ளிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.