

தூத்துக்குடி மாவட்டம், விளாத்தி குளம் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம்சார்பில் குளத்தூர் அருகே வேப்பலோடை அரசு மேல்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு நடந்தது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர் தலைமை வகித்தார். உதவிதலைமை ஆசிரியர் ப்ளோரிடா முன்னிலை வகித்தார். விளாத்திகுளம் அரசு மருத்துவமனை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் ராம்பிரசாத் பேசினார். எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு நாடகத்தை, மாணவ, மாணவிகள் நடத்தினர். இதில் வேப்பலோடை அன்னை தெரசாகிராம பொதுநலச் சங்க செயலாளர் ஜேம்ஸ்அமிர்தராஜ், பொருளாளர் முத்துகிருஷ்ணன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.