

புதுச்சேரி அரசின் கல்வித் துறை சார்பில், காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள ஜவஹர் சிறுவர் இல்லத்தில் குழந்தைகள் தின பரிசளிப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் அமைச்சர் கமலக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தைகள் தினத்தை யொட்டி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
அவர் பேசும்போது, கல்வி என்பது மாணவர்கள் பாடப் புத்தகங்களை படிப்பதோடு மட்டும் நின்று விடுவது அல்ல. விளையாட்டு, ஓவியம், பாட்டுஉள்ளிட்ட பிற கலைகள் மீது மாணவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை ஆசிரியர்களும், பெற்றோர்களும் கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
இவ்விழாவில் மாவட்ட துணை ஆட்சியர் (வருவாய்) எம்.ஆதர்ஷ், முதன்மைக் கல்வி அதிகாரி ஏ.அல்லி, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநர் கே.கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.