ராஜபாளையம் அன்னப்பராஜா பள்ளியில் கலை, அறிவியல் கண்காட்சி: பார்வையாளர்களை கவர்ந்த இயந்திர மனிதன்

ராஜபாளையம் அன்னப்பராஜா பள்ளியில் கலை, அறிவியல் கண்காட்சி: பார்வையாளர்களை கவர்ந்த இயந்திர மனிதன்
Updated on
1 min read

ராஜபாளையம் பள்ளியில் நடந்த கலை அறிவியல் கண்காட்சியில் இயந்திர மனிதன் உள்ளிட்ட ரோபாட் டிக் சாதனங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் கலை, அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் செயலர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பி.ஏ.ரமேஷ் முன்னிலை வகித்தார். காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் எம்.நாகஷங்கர் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

கண்காட்சியில், பள்ளியின் முகப்புத் தோற்றம், தஞ்சை பெருவுடையார் கோயில், இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் மரம், கிராமியக் கைவினைப் பொருட்கள், பழமையான யாழ் போன்ற இசைக் கருவிகள்,ஜாலியன் வாலாபாக் நிகழ்வின் மாதிரி,கணித முறையில் கட்டிடத்தின் உயரத்தை அளக்க உதவும் கருவி, தானாக இயங்கும் கார், இயந்திர மனிதன் உள்ளிட்ட ரோபோட்டிக் கருவிகள், 5 கிலோ கிராம் எடையில் 5 மீட்டர் நீளமுள்ள மூக்கை உடைக்கும் ஊசல் குண்டு, பழமையான அஞ்சல் தலைகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தேசிய விருது பெற்ற, என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை இயக்குநர் அ.சுப்பையா பாண்டியன், அஞ்சல்தலை சேகரிப்பாளர் காதிர் ஹூசைன்ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், என்.ஏ.ராமச்சந்திரராஜா குருகுலம் தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்தி ராஜா,நிர்வாகி ராஜ பிரதீப், அறக்கட்டளை உறுப்பினர்கள் என்.கே.ராம்விஷ்ணு ராஜா, என்.கே.ராம்வெங்கட் ராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 2 நாட்கள் நடைபெற்ற இக்கண் காட்சியை ஆயிரத்துக்கும் மேற்பட்டமாணவர்கள் பார்வையிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in