மத்திய அரசின் இன்ஸ்பையர் விருதுக்கு பள்ளி மாணவர்கள் தேர்வு

மத்திய அரசின் இன்ஸ்பையர் விருதுக்கு பள்ளி மாணவர்கள் தேர்வு
Updated on
1 min read

மத்திய அரசின் இன்ஸ்பையர் விருது போட்டிக்கு கோவையில் 104 பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறையினர் கூறியதாவது:மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், ‘‘இன்ஸ்பையர் மானாக் ஸ்கீம்’' என்ற பெயரில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு இடையே கண்காட்சி நடத்தப்படு கிறது.

இதில் பங்கேற்கும் மாணவர்கள் வரைவு செயல் திட்டங்களுடன் பதிவு செய்ய வேண்டும். அதில் தேர்வு செய்யப்படும் வரைவு செயல் திட்டங்களுக்கு முழு வடிவம் கொடுப்பதற்கு மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப் படுகிறது.

இதற்காக www.inspireawardsdst.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் தமிழகத்தில் இருந்து 2,302 வரைவு செயல் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி கோவை மாவட்டத்தில் 104 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் 59 பேர் அரசு பள்ளி மாணவர்கள். மாணவர்கள் தங்கள் படைப்புகளை உருவாக்கி கண்காட்சியில் காட்சிப்படுத்த உள்ளனர் என்று தெரி வித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in