மாவட்ட அளவில் நடந்த விநாடி-வினா போட்டியில் சத்திரரெட்டியபட்டி மேல்நிலைப் பள்ளி முதல் இடம்

மாவட்ட அளவில் நடந்த விநாடி-வினா போட்டியில் சத்திரரெட்டியபட்டி மேல்நிலைப் பள்ளி முதல் இடம்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட அளவிலான வினாடி-வினா போட்டியில் சத்திர ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதல் இடம் பிடித்துள்ளது.
மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிமாணவர்களுக்கு மாவட்ட அளவிலான விநாடி- வினா போட்டி, விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் சுபாஷினி தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் சின்னராசு, மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்டஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங் கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மாவட்ட அளவில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்பட்ட விநாடி- வினா போட்டிகளில் சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதல் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.2000 பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1000 பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் டி.பி.என்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வடமலைக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்தி ருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in