மழைநீர் சேகரிப்பு: மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

மழைநீர் சேகரிப்பு: மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
Updated on
1 min read

ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக்காக மரக்கன்றுகளை ஏந்தியபடி மாண வர்கள் பேரணி சென்றனர்.

பெரியகுளம் குள்ளப்புரம் அரசு வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கண்டமனூரில் கிராமத் தங்கல் திட்டத்தில் தங்கி விவசாயிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக கண்டமனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து மழைநீர் சேகரிப்பு ஊர்வலத்தை நடத்தினர். பள்ளி வளாகத்தில் பேரணியை வழக்கறிஞர் வசந்த்நாராயணன் தொடங்கி வைத்தார்.

பேரணியில் மாணவர்கள் மரக்கன்றுகளை ஏந்தியபடி சென்றனர். பேரணியின் முடிவில், பள்ளி வளாகத்தில் மா, தேக்கு, வேம்பு உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன. நடப்பு கல்வியாண்டுக்குள் 300 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ண யிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலை மையாசிரியை நாகலட்சுமி, வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சந்தோஷ், சம்பத்குமார், ராஜேஷ்பாபு, செல்வமணிகண்டன், கணபதி, விக்னேஷ், அக்சய்,தருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in