அரசு பள்ளி மாணவர்களுக்கு குடை வழங்கிய கொடையாளர்கள்

நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட குடைகள்.
நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட குடைகள்.
Updated on
1 min read

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு குடைகள் வழங்கப்பட்டன.

கடலாடி ஒன்றியம் நரசிங்கக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 1 முதல் 5 -ம் வகுப்பு வரை ஈராசிரியர் பள்ளியாக செயல்படுகிறது. இந்த பள்ளியில் 25-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

வடகிழக்குப் பருவ மழை காலம் என்பதால் தற்போது மழை பெய்து வருவதாலும் மாணவ, மாணவிகளின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு பள்ளியின் கல்வி புரவலர் வேம்பார் அந்தோணிராஜ் என்பவர் குடைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், இடைநிலை ஆசிரியர் பொ.அய்யப்பன் ஆகியோர் மாணவர்களுக்கு குடைகளை வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in